தனது நீண்ட நாள் காதலியான நடாஷா தலாலை அலிபாக் நகரில் நாளை திருமணம் செய்துக் கொள்கிறார் பாலிவுட் நடிகர் வருண் தவான்.

”அலிபாக்கில் பீச் ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமான அதே நேரம் எளிமையான முறையில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தம்பதியினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொழில்துறையினர் இதில் கலந்துக் கொள்வார்கள். இந்தத் திருமணத்தில் ஷாருக் கான், கரண் ஜோஹர், ஆலியா பட் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட 50 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

”இந்தத் திருமணத்திற்கு வருணின் நெருங்கிய நண்பர்களின் தந்தையான போனிகபூர் அழைக்கப்படவில்லை. போனியின் மகன் அர்ஜுன் கபூர் அழைக்கப்பட்டிருக்கிறார். அனில் கபூரின் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அழைக்கப்படவில்லை. பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை”

 

[youtube-feed feed=1]