சென்னை,
சென்னை மக்களை புரட்டி எடுத்த வர்தா புயல் தற்போது லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
வர்தா புயல் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிப்பு தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். இந்த தாழ்வு மண்டலம் மீண்டும் புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை அருகே கரையை கடந்த 12ந்தேதி கரையை கடந்த  வர்தா புயல் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை உலுக்கிவிட்டது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் விழுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.  பல இடங்களில் இதுவரை மின் விநியோகம் சீரமைக்கப்படாத நிலையில்,
தமிழக மக்களை புரட்டி போட்ட வர்தா புயல் வலுவிலந்து தற்போது அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:–
ஓரிரு இடங்களில் மழை
வார்தா புயல் படிப்படியாக வலு இழந்து, தமிழகத்தைவிட்டு சென்றுவிட்டது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு புயல் எதுவும் உருவாகும் நிலையில் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், குன்னூரில் 10 செ.மீ., தாராபுரம் 5 செ.மீ., கேத்தி 2 செ.மீ., பெரியநாயக்கன்பாளையம், சிவகிரி, குந்தாபாலம், வால்பாறை, ஊட்டி, பீளமேடு, போளூர், கோவை தெற்கு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.