சென்னை: தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி (ஏப்ரல்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மே 10 ஆம் தேதி வரை 22 நாள்கள் நடைபெறவுள்ளன. இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசசர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 1,450 மாணவர்கள் சேர்க்கப்படுவாக்ள்.
ரூ.1,018.85 கோடியில் 19 அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் உத்தரமேரூர் தாலுகா மருத்துவமனைக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் நிரப்பப்படும்.
மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும்.
தென்காசி அரசு மருத்துவமனை ரூ.10 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும்.
தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
சென்னை கிண்டியில் கிங்ஸ் மருத்துவ மையத்தில் நவீன, காமா நுண்கதிர் அறை ரூ.1.90 கோடியில் கட்டப்படும்.
பதிவுபெற்ற பம்பரம்பரை மருத்துவர்கள் ஓய்வு ஊதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை காலை 7 மணி முதல் செய்யப்படும்
உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.