தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று (ஜூன் 7) முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் முகக்கவசத்தை எப்படி அணிவது என்பதே தெரியாமல் உள்ளனர். இதற்காகத் திரையுலக நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறிய குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
இதில் கிருஷ்ணா, சதீஷ், சந்தீப் கிஷன், வித்யூ லேகா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.