
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார் பின்னர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதனிடையே தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஹரி நாடாருக்கு ஜோடியாக ‘2K அழகானது ஒரு காதல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முத்தமிழ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் இன்று தொடங்கியது. தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
[youtube-feed feed=1]Pooja today…filming starts… pic.twitter.com/c0Ev0AjRYv
— Vanitha (@vanithavijayku1) February 27, 2021