அசோக் செல்வன். அபிநயா செல்வத்துடன் இணைந்து சொந்தமாக அவர் தொடங்கியுள்ள ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம், ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் இணைந்து ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்க, ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல் கலந்த நகைச்சுவைப் படமாக இது உருவாகியுள்ளது.
விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன், இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.