
‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ‘சீயான் 60’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம்.
‘கோப்ரா’ தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது.
இதில் உள்ள நாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். இன்னொரு நாயகியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘பிதாமகன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சூர்யா – விக்ரமுடன் நடனமாடியிருந்தார் சிம்ரன். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ஒரே கட்டமாகப் படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகர்களிடம் கால்ஷீட் தேதிகள் வாங்கப்பட்டுள்ளன.
விக்ரமின் 60-வது படத்தில் நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியிருக்கிறார். வாணி ’சியான் 60-ல்’ நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வாணி போஜன், அந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பது உற்சாகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]Excited to be a part ❤️ thank u so much #Chiyaan60 https://t.co/64F5GPcnNo
— Vani Bhojan (@vanibhojanoffl) March 13, 2021