வாங்க தமிழ் பழகலாம்: என்.சொக்கன்

Must read

அத்தியாயம்:  10
‘உங்க வீடு எங்கே இருக்கு?’
‘காந்தி பூங்காவுக்கு அருகாமையிலே!’
தினசரிப்பேச்சில், எழுத்தில் ‘அருகாமை’ என்ற சொல்லைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் என்ன?
‘அருகு’ என்றால் ‘பக்கம்’ என்று பொருள். ஆக, ‘நான் பூங்காவுக்கு அருகில் வசிக்கிறேன்’ என்று ஒருவர் சொன்னால், அந்தப் பூங்காவிலிருந்து அவருடைய இல்லத்துக்கு விரைவில் சென்றுவிடலாம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படியானால், ‘அருகாமை’ என்பது எதைக்குறிக்கும்?
குணங்களிலேயே சிறந்த குணம், ‘பொய்யாமை’ என்பார்கள். அதென்ன ‘பொய்யாமை’?
பொய்சொல்லாமலிருக்கும் தன்மை என்பதுதான் ‘பொய்யாமை’. அதாவது, எப்போதும் உண்மையே பேசுவது.
இதேபோல், குணங்களிலேயே மோசமான குணம் ஒன்றுண்டு: இன்னொருவர்மேல் வரும் ‘பொறாமை’.
பொய்யாமை, பொறாமை என்ற இந்த இரு சொற்களையும் கவனித்துப்பாருங்கள்:
பொய்யாமை => பொய்யா + மை => பொய்சொல்லாமலிருக்கும் தன்மை
பொறாமை => பொறா + மை => ஒருவருடைய சிறப்பைக்கண்டு மனம் பொறாமல் தவிக்கும் தன்மை.
(நிறைவடைந்தது)
 

More articles

1 COMMENT

Latest article