கடம்பூர்
மர்மபநபர்கள் கல்வீசியதால் வந்தே பாரத் ரயில்கண்ணாடி உடைந்துள்ளது.

நேற்று காலையில் வழக்கம்போல் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் கடம்பூர் அருகே தங்கம்மாள்புரம் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த மர்மநபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசினர்.
இதனா; ரயிலின் சி.1 பெட்டியில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கல் வீச்சால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வந்தே பாரத் ரயில் எஓட்டுனர் மதுரை ரயில் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகார் தொடர்பாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் மீது கல்வீசிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]