சென்னை: தமிழக மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில், சேவை அடுத்ததாக, சென்னை டூ ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் சமர்க்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பகல் நேரங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,,    இதன்மூலம் சுமார் 8 மணி நேரத்தில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்றடைய முடியும், அதுபோல அங்கிருந்து புறப்பட்டு இரவில் சென்னை வந்தடைய முடியும்.  இது தெற்கு ரயில்வேயின் ஒரு முக்கிய மைல்கல் என  தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், ராமேஸ்வரம் செல்லும் யாத்ரிகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில்கள் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்க முடியும் என்பதால், அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன்படி,  வந்தே பாரத் விரைவில் சென்னை, ராமேஸ்வரத்தை இணைத்து ரயிலை இயக்க முடியும், ஆனால், அதற்கான இறுதி வழித்தடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் இயக்கும் வழித்தடங்களில்,  53 கி.மீ. தூரம், அதாவது,   ராமநாதபுரம்-ராமேஸ்வரம் ஒற்றை அகலப் பாதைப் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், தெற்கு ரயில்வே சென்னைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்திலிருந்து புதிய பகல்நேர வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்குவதற்கான திட்டம் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​600 கி.மீ.-660 கி.மீ. நீளமுள்ள கிளை பாதை மற்றும் பிரதான பாதை  (600-km-long branch line and main line,) வழியாக பகல்நேர சேவைகள் எதுவும் இயக்கப்படவில்லை, மேலும் முன்மொழியப்பட்ட ரயில் தற்போதுள்ள மூன்று இரவு நேர சேவைகளில் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தரயில் இயக்கப்படும் வழித்தடலில் உள்ள சுமார் “53 கி.மீ. நீளமுள்ள இந்தப் பகுதி முழுவதும் மின்சார ரயில் பாதை இயக்கத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உச்சுபுளி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பருந்து கடற்படை விமான நிலையத்திற்கு அருகில் (Parundu Naval Air Station near Uchuli)  சுமார் 220 மீட்டர் இடைவெளியில் மேல்நிலை கேபிள்கள் இல்லை. ரயில்கள் தற்போது இந்த பாதையை அவற்றின் இயல்பான வேகத்தில் கடக்கின்றன, வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தனித்தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்,” என்று ஒரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  முன்மொழியப்பட்ட வந்தே பாரத் திட்டத்திற்கான இறுதி பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரி மேலும் கூறினார். “அதே நாளில் திரும்பும் பயணத்தை இயக்க, ரயில் எட்டு மணி நேரத்திற்குள் ராமேஸ்வரத்தை அடைய வேண்டும். பாதையை இறுதி செய்வதற்கு முன் தேவை, பயண நேரம் மற்றும் பாதை திறன் ஆகியவை காரணியாகக் கருதப்படும்,” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில்கள் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே இயக்க முடியும் என்பதால், தெற்கு ரயில்வேயின் மின்சார ஆய்வாளர் இந்தப் பிரிவை அனுமதித்தது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மின்மயமாக்கல் முடிந்த பிறகு மின்சார ரயில் பாதை மூலம் இழுத்துச் செல்லப்பட்ட முதல் ரயில் ராமேஸ்வரம்-ஓகா எக்ஸ்பிரஸ் ஆகும்.

தற்போது, ராமேஸ்வரத்துக்கு,  ​​சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று தினசரி சேவைகளும், சென்னை மற்றும் ராமேஸ்வரம் இடையே நான்கு வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன.