தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை தீர்மானித்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன.

இந்நிலையில் நேற்று மாலை பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாஜக தொண்டர் ஒருவர் ‘வலிமை அப்டேட் எப்ப’ என ட்விட்டரில் வானதியிடம் கேட்டிருந்தார்.

அதற்கு, ’நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி’ என பதிலளித்தார் வானதி சீனிவாசன். இந்த ட்வீட் உடனடியாக வைரலானது.

[youtube-feed feed=1]