கோயம்புத்தூர்

கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் வானதி சீனிவாசன் மத்திய அரசிடம் இருந்த் தடுப்பூசி வாங்கித் தர வேண்டும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா  பாதிப்பு தமிழகத்தில் சற்றே குறையத் தொடக்கி உள்ளன.  ஆயினும் கோவையில் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.  தினசரி பாதிப்பு மற்றும் தற்போதைய பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.   இதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை சென்று ஆய்வு நடத்தினார்.  மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும் அவர் சென்றார்.

பாஜக தலைவரும் கோவை தெற்கு மக்களவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாகக் குறை கூறி வருகிறார்.  இந்த பகுதிக்குத் தடுப்பூசிகள் கொடுப்பதில் முன்னுரிமை அளிப்பது இல்லை எனவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், |”சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக அளவில் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.   கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை.  மாறாகத் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.  கோவையில் மொத்தம் உள்ள 35 லட்சம் பேரில் இதுவரை 6.2 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு ள்ளது.

தடுப்பூசி கையிருப்பு உள்ளவரை மட்டுமே இவ்வாறு கொடுக்க முடியும்.  கோவை மக்கள் மீது வானதி சீனிவாசனுக்கு உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் பேசி தேவையான தடுப்பூசிகளை வாங்கித் தரவேண்டும்   நாங்கள் சேப்பாக்கம் தடுப்பூசி உற்பத்தி மையத்டை தொடங்க முயன்று வருகிறோம்

நீங்களும் உங்களால் முடியும் என்றால் எங்களுக்காக சேப்பாக்கம் தடுப்பூசி உற்பத்தி மையம் குறித்து மத்திய அரசிடம் பேசலாம்.  தடுப்பூசி கையிருப்பு நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து வருகிறது.  இன்றும் நாளையும் தடுப்பூசி போட்டவுடன் கையிருப்பு காலி ஆகி விடும்.  எனவே மத்திய அரசு உடனடியாக தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” எனப் பதில் அளித்துள்ளார்.