திண்டுக்கல்: தமிழகத்துக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்ல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்க்ததில்,  திண்டுக்கலில்  தனக்கு அளிக்கப்பட்ட  உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என புகைப்படங்களுடன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று கர்நாடகாவில் சென்னை மைசூரு வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்ததுடன், பெங்களூரில் 2-வது சர்வதேச முனையம், கெம்பே கவுடா சிலை திறப்பு, காசி ரயில் தொடக்க விழா என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் தமிழ்நாடு வந்தவர், திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜாவுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கினார். அதேபோல் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

திண்டுக்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தொடர்பாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தமது டிவிட்டர்பக்கத்தில் தமிழில், வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். இதில் பிரதமர் மோடிக்கு அளிக்க வரவேற்பு படங்களும் பகிரப்பட்டுள்ளன.