சென்னை: சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் பயனதாக, 2025 புத்தாண்டு முதல், கோயம்பேடு அடுத்த வானகரம் மற்றும் அடையாளம்பட்டு (திருவேற்காடு) கிராம பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி அதன் அதிகார வரம்பில் வானகரம் மற்றும் அடையாப்பம்பட்டு ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்களை சேர்த்துள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் மென்பொருள் உள்பட தொழில்நிறுவனங்கள் அதிகரிப்பு காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசு மாநிலங்களில் நகரமயமாக்கலை அதிகரிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, மாநிலங்களுக்கு உதவி வருகிறது. அதன்படி, தமிழ்நாடும், நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக பல பஞ்சாயத்துக்கள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதுடன், நகராட்சிகளும், மாநகராட்சியாக மாற்றப்பட்டு, பல்வேறு வளர்ச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், நகர்ப்புறங்களின் புறநகர் பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைத்து, அங்கு வசிக்கும், மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைத்து, நகரங்களுடன் இணைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புர பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருகின்றன.
தமிழ்நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்று. 10.08.2024 அன்று திருவண்ணாமலை. நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆ.கிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கியுள்ளது. மேலும். 12.08.2024 அன்று மாமல்லபுரம். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக அமைத்துருவாக்க உத்தேசமுடிவினை வெளியிடப்பட்டுள்ளன. அறிவித்து அரசாணைகள் இந்நிலையில், அரசு நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும். முழுஅளவிலும் வழங்குதல் (comprehensive manner உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு. தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது.
தற்போது. 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 05.01.2025ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள் மாநகராட்சிகள். நகராட்சிகளுடன் இணைக்கவும். பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில் உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
அரசு, இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி மதுரை. திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன். 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும். திருவாரூர் திருவள்ளூர் சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும். தனித்தும் கன்னியாகுமரி அரூர். பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும். 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும். இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீராண நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிர்வாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.