2023 ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விண்கலங்களை ஏவி வருகிறது.

சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட போது அதனை நேரலையிலும் தொலைக்காட்சியிலும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

சந்திரயான்-3 கடைசி கட்ட கவுண்ட் டவுன் ஒலித்த போது அந்த குரலுடன் பல்லாயிரம் பேர் தங்களை அறியாமல் ஐக்கியமானார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த குரலுக்கு சொந்தக்காரரான இஸ்ரோ-வில் பணிபுரியும் வளர்மதி கடந்த ஆறு ஆண்டுகளாக இஸ்ரோ ஏவும் அனைத்து ராக்கெட்டுகளுக்கும் கவுண்ட்-டவுன் குரல் கொடுத்துள்ளார்.

50 வயதைக் கடந்த வளர்மதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

இஸ்ரோவுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக ஒலித்த குரல் கடைசியாக ஜூலை 30 ம் தேதி PSLV-C56 மூலம் 7 சிங்கப்பூர் சாட்டிலைட்களை ஏவியதற்கு ஒலித்தது.

பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என்று ஒரு சிலரின் குரல் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பதைப் போல் இஸ்ரோ வளர்மதியின் குரலும் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

[youtube-feed feed=1]