ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தைத் தயாரித்து வரும் போனி கபூர், ‘வலிமை’ படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அப்படி ஓரி விஷயம் நடந்தால் அது அஜித் படங்களில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் முதல் படம் என பெருமையாக சொல்லலாம்.
‘வலிமை’ படத்தில் அஜித்துடன் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மீதி யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பட்டியலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

[youtube-feed feed=1]