ஜெய்ப்பூர்

 

பெண்களின் மீதான வன்முறைகளுக்கு காதலர் தினம்தான் காரணம் என்று ஆர்.எஸ் எஸ் தலைவர் தெரிவித்துள்ளது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்ப்பூரில் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் பயிற்சி முகாம் நடைபெற்றது.  இதன் நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கூறியதாவது :

பலாத்காரம், சட்டபூர்வமற்ற குழந்தைகள், மற்றும் அனைத்து பெண்களுக்கு எதிரான சீர்கேடுகளுக்கும் காதலர் தினம் போன்ற மேற்கத்திய சீரழிவே முக்கிய காரணம்

இந்தியாவில் காதல் என்பது பக்திபூர்வமானது, புனிதமானது.

ராதா-கிருஷ்ணா, லைலா-மஜ்னு, ஹீர்=ராஞ்சா போன்ற அமர காதல்களுக்கு இடையே மேற்கத்திய கலாசாரமான காதலர் தினம் நுழைவினால் சமூக சீர்கேடுகள் பெரிதும் ஏற்பட்டுள்ளன

இந்த சீர்கேடு என்பது இந்தியாவுக்கு மட்டும் அல்ல, அகில உலகுக்கும்

மக்களின் ஆன்மாவை சுத்தப் படுத்தும் ஒரு இயக்கத்தின் மூலமே இந்த தேசத்தையும், மக்கள் சமுதாயத்தையும் முன்னேற்ற முடியும்

ஆர் எஸ் எஸ் ஆன்மாவை சுத்தப்படுத்தி தனிமனித ஒழுக்கத்தை மேலும் மேம்படுத்துகிறது

ஆர் எஸ் எஸ் தீண்டாமை, ஜாதீய வெறி ஆகியவைகளை ஒருபோதும் ஆதரிக்காது

காஷ்மீரில் கல்லெறி வீரர்கள் நடத்தும் போராட்டம் தேச நலனுக்கு எதிரான மனிதாபிமானமற்ற ஒரு செயல்

பசுவதை செய்பவர்களும், மாட்டுக்கறி ஆதரவாளர்கள் நடத்தும் பீஃப் பார்ட்டிகளும் சிறிதும் இரக்கமற்றவர்கள்

சீனத் தயாரிப்புகளை எக்காரணம் கொண்டும் வாங்காமல் நமது தேச தயாரிப்பாளர்களுக்கு உதவி, பல கோடி மக்களின் வேலை வாய்ப்பு, மற்றும் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” – இவ்வாறு இந்திரேஷ் குமார் கூறினார்