தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ எனும் பெயரில் ‘பிங்க்’ ரீமேக் உருவாகி வருகிறது. ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.
தற்போது, இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகளின்போது பவன் கல்யாண் நீதிமன்றத்தில் வாதாடுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிவிட்டது.
முன்னதாக, படப்பிடிப்பு தொடங்கிய நாளன்றே படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது. தற்போது மீண்டும் புகைப்படங்கள் லீக்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]