ஸ்ரீநகர்: 

ம்முவில் உள்ள பிரபலமான வைஷ்ணவதேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில். இது ஜம்முவில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது.

இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள்  பலரும் வந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு  வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 50,000 -ஐ தாண்டி விட்டது.

இதன் காரணமாக வைஷ்ணவி தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 24 முதல் தொடங்கப்பட்ட யாத்ரிகர்கள் தரிசனம் இன்று அதிகாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவின்படி,  ஜம்முவில் வைஷ்ணோ தேவி ஆலயத்தை பார்வையிட 50,000 யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிப்படுவது குறிப்பிடத்தக்கது.