த்ரா, ஜம்மு காஷ்மீர்

ம்மு காஷ்மீரில் உள்ள உலகப் புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி ஆலயம் ஊரடங்கால் 5 மாதம் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கத்ரா என்னும் நகரில் உலகப் புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி ஆலயம் உள்ளது.  இந்த குகைக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவது வழக்கமாகும்.  கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது வைஷ்ணவி தேவி கோவிலும் மூடப்பட்டது.

தற்போது ஊரடங்கு விதிகள் தளர்வு காரணமாக வைஷ்ணவி தேவி கோவில் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.   இந்த கோவிலுக்கு தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 1900 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் 100 பேர் எனத் தினசரி 2000 பேருக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது

”கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.  அத்துடன் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை நிறுவி இருக்க வேண்டும்.  அத்துடன் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து வருவோர் அவசியம் கொரோனா இல்லை என்னும் சான்றிதழுடன் வர வேண்டும்.” எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.