பாரீஸ்: பிரிட்டலில் நடைபெற்று வரும்  செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில்  தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாம்பியன் படத்தை கைப்பற்றி உள்ளார். இவர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.  இறுதிப் போட்டி டிராவில் முடிந்ததால் 8.5 புள்ளிகள் பெற்று தொடரின் சாம்பியன் பட்டத்தை வைஷாலி வென்றார்

FIDE கிராண்ட் ஸ்விஸ் தொடரின் மகளிா் பிரிவு போட்டி நேற்று ( 10ந்தேதி) நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்  10-ஆவது சுற்றில் வைஷாலி, சீனாவின் முன்னாள் மகளிா் உலக சாம்பியனான ஜோங்யி டானை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருந்தார். இதன் காரணமாக  2,498 ஈலோ லைவ் புள்ளிகளுடன்  முன்னிலையில் தொடர்ந்து,  வந்த வைஷாலி, மேலும் 2 புள்ளிகள் பெறும் பட்சத்தில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெறுவாா் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளுடன் மோதினார். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடி வந்தனர். இறுதியில்,  போட்டி டிராவில் முடிந்ததால் 8.5 புள்ளிகள் பெற்று தொடரின் சாமியன் பட்டத்தை வென்றார் வைஷாலி.

இதையடுத்து கிராண்ட் மாஸ்டா்களான, உலகின் முதல் உடன்பிறந்தோா் என்ற சாதனையை வைஷாலியும், அவரது சகோதரரான ஆா்.பிரக்ஞானந்தாவும் படைத்துள்ளார்கள். பிரக்ஞானந்தா ஏற்கெனவே கிராண்ட்மாஸ்டராக இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மகளிருக்கான செஸ் கேன்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகியுள்ளார்.