தி. இந்து தமிழ் நாளிதழுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், “‘1996-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட், ஜனதாதளம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க ம.தி.மு.க. முயற்சித்தது. அந்த நேரத்தில் பா.ம.க.வுடனும் பேசினோம். அக் கட்சிக்கு 78 எம்எல்ஏ சீட்டுகளும்ம், 14 எம்பி சீட்டுகளும் தருவதாகச் சொன்னோம்.
சரி என்று சொன்ன ராமதாஸ், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார் என்று இரு நாட்கள் காத்திருந்தேன். ஆனால், ஒரு தொழிலதிபரின் உதவியோடு அதைக் கெடுத்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம், தனது முகநூல் பதிவில் பதில் அளித்திருக்கிறார். “அற்ப மனிதர் வைகோ” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள முகநூல் பதிவு:
“பைசா பெறுமானம் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் பதரச வெப்பத்துடன் பதிலடி கொடுக்கும் பழக்கம் கொண்ட வைகோ, கூட்டணி முறிவு நிகழ்ந்தவுடன், வாழப்பாடியார் பற்றி புகார் சொல்லாமல், மௌனமாக இருந்தது ஏன் ?
◆
வாழப்பாடியார் உயிரோடு இல்லை என்பதால், 10 ஆண்டுகள் கடந்த பிறகு, ‘தி ஹிந்து’ கேட்ட கேள்விக்கு பொறுப்பான பதில் சொல்லாமல், பொய் மூட்டையை
அவிழ்த்துவிடுகிறார், வைகோ !
◆
1996 தேர்தல் முடிந்த பிறகு, எனது ‘ ஏவுகணை ‘ வார இதழுக்காக இரண்டு நாட்கள் வைகோவை அவரது அண்ணா நகர் வீட்டில் நேர் காணல் செய்தேன் !
[ மினி தொடராகவும் மகிழ்ச்சியோடு வெளியிட்டேன் ! ]
அப்போது, கூட்டணி முறிவு தொடர்பாகவும் பேச்சு வந்தது ! அப்போது, வாழப்பாடியார் கூட்டணி முறிவுக்குக் காரணமாக இருந்தார் என்று, வைகோ சொல்லவில்லை ! இப்போது பொய் சொல்கிறார் !
◆
உலகத்தில் உள்ள அரசியல் தலைவர்களில்… ” லட்சம் கோடி டாலர் கொட்டிக் கொடுத்தாலும், காட்டிக்கொடுக்கமாட்டார்…” என்று… ஈராக் அதிபர் மாவீரன் சதாம் உசேனிடம் சான்று பெற்றவர்,
வாழப்பாடியார் !
◆
சதாம் உசேனுடன் வாழப்பாடியார் கை குலுக்கும் காட்சியைப் பார்த்த திமுக தலைவர் மு. கருணாநிதி, ” மெய் சிலிர்த்துப்போனேன்…” என்றார் ! அவருக்குத் தெரியும் இந்த சந்திப்பு, சர்வதேச அளவில் எத்தனை உயர்வானது என்று !
◆
அற்ப விஷயங்களுக்காக பொய் சொல்லும் வைகோ அரசியலில் ஒதுக்கப்படவேன்டியவர்தான் !” – இவ்வாறு தனது முகநூல் பதிவில் மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் தெரிவித்திருக்கிறார்.