கல் எறிவதற்கும், சோடா பாட்டில் வீசுவதற்கும் எங்களுக்கும் தொியும் என்று ஜீயா் சடகோப ராமானுஜா் பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது அவர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்துப் பேசினார்.
கச்சா எண்ணை விலை உலகச் சந்தையில் குறைந்துகொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கும் மத்திய அரசை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், “திராவிட இயக்கங்கள் மதயானைகளை அடக்கியே பழக்கப்பட்டவர்கள். கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்குத் தெரியும் என்று ஜீயர் ஒருவர் கூறியிருக்கிறார். சோடா பாட்டில், கல் எடுத்தாலும், அதனை அண்ணா வழியில் சந்திப்போம்” என்று வைகோ பேசினார்.