சென்னை:
தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வி.சி.க. பங்கேற்குமோ  என்ற சூழ்நிலையில் நேற்று இரவு அக் கட்சி தலைவர் திருமாவளவனை வைகோ சந்தித்தார்.
29aprilsvk01_va_30_1443575e
தி.மு.க பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக  அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக மக்கள் நல கூட்டணி தலைமை ஒருங்கினைப்பாளர் வைகோ அறிவித்தார், ஆனால் இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்  என்கிற தொணியில் அக் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்ததை தொடர்ந்து மக்கள் நல கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு வைகோ – திருமாவளவன் ஆகியோர் திடீரென  சந்தித்தனர்.   இதன் பிறகு  செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்குமா இல்லை புறக்கணிக்குமா என்பது இன்று  செய்வாய் காலை அறிவிப்பதாக தெரிவித்தார்.