சென்னை: கட்சி தலைவராக வைகோ தோற்றுவிட்டார்; இது ஜனநாயக படுகொலை  என மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி கட்சிக்குள் அடியெடுத்தது முதல் மூத்த தலைவர்களுக்கும் அவருக்கும் இடையே புரிந்துணர்வு குறைந்தது. இதனால் பல மூத்த தலைவர்கள் வைகோ மீது அதிருப்தி அடைந்தனர். அதன்படி, மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே எழுந்த நெருடலை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய வைகோ, அதை செய்யாததால், அவர்களுக்கு இடையேயான மோதல் போஸ்டரில் எதிரொலித்தது. இதையடுத்து இருவரையும் வைகோ  சமாதானம் செய்து வைத்தாலும், அவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து கொண்டிருந்தது.

இதையடுத்து தனது மகனுக்காக வைகோ சிலமுடிவுகளை எடுக்க வேண்டிய  கட்டாயத்தக்கு தள்ளப்பட்டார். அதன்படி, ஏற்கனவே மல்லை சத்யாவை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்தநிலையில், தற்போது கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.  மதிமுகவின் ஒற்றுமைக்கும், நன்மதிப்புக்கும் கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால்,  மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி உள்ளதாக வைகோ அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா,   என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறியவர், இதன்மூம் வைகோ தனது மகன் குறித்தே   சிந்திக்கிறார் என்பது நிரூபணமாகி உள்ளது.  ஒரு கட்சியின்  தலைவராக ம.தி.மு.மு.க பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார்; என்னை நீக்கிய செயல்,   ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்துள்ளார்.

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா டிஸ்மிஸ்! வைகோ அறிவிப்பு…