சென்னை

ரும் பிப்ரவரி 11 வரை மேல் மருவத்தூரில்  வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை- மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு (12636), பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதாவது 7.20 மணி நேரத்தில் சென்னை சென்றடையும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும். இவ்விரு வழிகளிலும் பகல் நேரத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருவதால் தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது.

தெற்கு ரயில்வே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேல்மருவத்தூரில் நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், (12636) டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 11 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.