தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதை கொரோனா தொற்றின் இரண்டாவது அலை என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்திலும் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி ஷாண்டில்யா தனக்கும் தனது தாய், தந்தையரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.