டெல்லி: இந்தியாவில் 12-14 வயது சிறார்களுக்கும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வான உள்ளதால், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 12வது, 13வது மற்றும் 14 வயது வரையிலான சிறார்களுக்கு பயோலாஜிக்கல் இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் (வரும் 16ந்தேதி) முதல் கொரோனா தடுப்பூசியும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.