கொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் இந்த ‘D614G’ மியூட்டேசனை மனிதர்களுக்கு ஏற்ப வைரஸ் தகவடைந்ததற்கு ஆதாரமாக பார்க்க முடியாது என்கின்றனர்.
வாஷிங்டன்: COVID-19 உறுதியான 27,000 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து தனித்துவ கொரோனா வைரஸின் மரபணு வரிசைமுறைகளை விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் 2019 டிசம்பரில் சீனாவில் தொடங்கிய பெருந்தொற்று காலத்தில் இருந்து தற்போது வரை இந்த வைரஸ் மிகக் குறைவாகவே மியூட்டேசன் அடைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, ஒரு செயல்படும் தன்மையுள்ள கொரோனா தடுப்பு மருந்துசாத்தியமே என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன.
PNAS ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, தொற்று நோயின் தொடக்க காலத்தில் இருந்து தனித்துவ கொரோனா வைரஸ் SARS-CoV-2 – இன் பலவகை மியூட்டேசன் அடைந்த மாறுபட்ட பதிப்புகளையும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 84 நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட 18,514 வகையான வைரஸ் மரபணுக்களில் வரிசைமுறைகளை வரிசைப்படுத்தி, அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை அட்டவணைப்படுத்தியது. அமெரிக்காவின் வால்டர் ரீட் ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் (WRAIR) உள்ளிட்ட விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சீனாவின் வுஹானில் ஆரம்பத்தில் பரவிய நாளில் இருந்து, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மியூட்டேசனே நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், இதுவரை ஏற்பட்டுள்ள மியூட்டேசன்கள் ஒரு தோராயமாகவே நடந்துள்ளது என்றும், அது தான் தோற்றும் மனிதனுக்கு ஏற்ப தகவடையவில்லை எனவும் கூறியுள்ளனர். அதே சமயம் இது சார்ந்த முந்தைய ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் மியூட்டேசன் அடைந்த வைரஸின் புதிய வடிவம் அதிக அளவு தொற்றும் தன்மையை வெளிப்படுத்தியதையும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக வைரஸின் ஒரு மியூட்டேசன் ஏற்பட்ட வடிவமான D614G (வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள அஸ்பார்டிக் ஆசிட் (D) வேறொரு அமினோ அமிலமான கிளைசினாக (G) மாறிய மியூட்டேசன் கொண்ட புதிய பதிப்பு வைரஸ் அதிக அளவில் தொற்றும் தன்மையுடன் இருந்தது கட்டாயம் குறிப்பிட வேண்டியது.
இருப்பினும், தற்போதைய ஆய்வின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள் இந்த ‘D 614 G’ பிறழ்வை மனிதர்களுக்கு ஏற்ப வைரஸ் தழுவியதற்கான ஆதாரமாக பார்க்க முடியாது என்றார். ஏனெனில் இந்த மியூட்டேசன் காரணமாக தொற்று அதிகரித்தது என்றாலும், அது தகவமைத்துக் கொள்ளவே நடந்தது என்று எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் இந்த மியூட்டேசனை குறிப்பிட்ட தகவமைப்பு காரணிகளுடன் தொடர்புப்படுத்த முடியவில்லை” என்று ஆய்வின் இணை ஆசிரியரான மோர்கன் ரோலண்ட் கூறினார்.
எனவே குறைந்த அளவிலான மரபணு மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு, ஆய்வாளர்கள் கூறுகையில், தற்போதைய தனித்துவ கொரோனா வைரஸின் அனைத்து பதிப்புகளும் ஒரு செயல்படும் தன்மையுடைய தடுப்பு மருந்தினால் கடுப்படுத்தப்படலாம். இருந்தாலும், மியூட்டேசன் HIV, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்கு போன்ற பிற வைரஸ்களுக்கான எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பை மிகவும் சவாலுக்கு உரியதாக மாற்றியதையும் நம்மால் மறுக்க இயலாது. ஆனால் உலகளாவிய பல்வேறு மியூட்டேசன் அடைந்த மாதிரி SARS-CoV-2 இந்த வைரஸ்களைக் காட்டிலும் குறைவான மியூட்டேசன் அடைந்துள்ளதை காட்டுகின்றன,” என்று ரோலண்ட் கூறினார்.
“எனவே COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக ஒரு பரந்த பாதுகாப்பான தடுப்பு மருந்தை உருவாக்க வைரஸின் மியூட்டேசன் அடையும் தன்மை ஒரு தடையாக இருக்காது என்பதில் எங்களால் உறுதியாக கூற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார். தற்போதைய கண்டுபிடிப்புகள் அனைத்து மக்களுக்கும் விரைவாக செயல்படக்கூடிய மற்றும் உலகளவில் பொருந்தக்கூடிய ஒரு தடுப்பு மருந்து கண்டறிய வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.