புதுடெல்லி:
னவரி மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும்.
கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை டிசம்பர் இறுதிக்குள் பெற்று விடுவோம் என்றும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூநாவல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அனைவரும் இயல்பான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் அவசரகால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வந்துவிடும் என்றும், ஆனால் மக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கான உரிமம் பிற்காலத்தில் வரக்கூடும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றிலிருந்து கொரோனா தடுப்பூசிக்கான கூடுதல் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவை கோரியுள்ளது. அதுமட்டுமன்றி சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிபுணர் குழுவும் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தரவை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தடுப்பூசிகள் 500-600 ரூபாய் வரை விற்கப்படும் என்றும் அதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.