சென்னை:
ன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான் என்பதால் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்த அரசு அறிவுறுத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனப்படும் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒன்பது மாதங்களுக்கு பின்னர் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.இந்த தடுப்பூசியை 25 நாட்களுக்கு இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று ஒரு லட்சம் மையங்களில் முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.