டெல்லி: கல்வி நிறுவனங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. படித்த இளைஞர்கள் கடுமையான வேலையின்மையை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால், அரசோ அவர்களை பல்வேறு வகைகளில் தண்டித்து வருகிறது. தற்போது படித்து பட்டம் பெற்ற இளைஞர்களை, குறிப்பாக ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த இளைஞர்களைத் தண்டிக்கிறது.
ஐஐடி உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு ராகுல் இவ்வாறு கருத்துகளை கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel