சென்னை: காலிப் பணியிடங்கள் தெரிவிக்கும்படி மின்வாரிய பணியாளர் நலன் பிரிவு அலுவலகம் அனைத்து மின்சார வாரிய அலுவலகத்துக் கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவை விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை அக்டோபர் 22ம் தேதிக்குள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு மின்வாரிய பணியாளர் நலன் பிரிவு அலுவலகம் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
Patrikai.com official YouTube Channel