நானி நடித்த வி படம் அமேசான் ப்ரைம்மில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலும் நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் ,

இதனையடுத்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார் நானி. இவர் நடிக்கும் நானி 28 படத்தின் அறிவிப்பும் வெளியானது.

தற்போது OTT-யில் வெளியான இவரது வி திரைப்படம் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

OTT-யில் நேரடியாக வெளியான பின் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த படம்.

இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .

 

[youtube-feed feed=1]