அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, டந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து மக்களைவை எம்பி சசிகலா புஷ்பாவை, கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கட்சியைவிட்டு நீக்கினார் அப்போதைய அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இதையடுத்து ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்தார் சசிகலாபுஷ்பா. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.
இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக கடந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வர இருப்பதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் சசிகலா பொறுப்பேற்க கூடாது எனவும் சசிகலா புஷ்பா, கூறிவந்தார்.
ஆனாலும் கடந்த டிசம்பர் 31ம் தேதி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் வி.கே. சசிகலா.
இதற்கிடையில், பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க கூடாது என மேலும், சசிகலா புஷ்பா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வர இருக்கிறது.
கட்சிப் பொதுச்செயலாளரான சசிகலா, விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று மாலை வர இருக்கும் தீர்ப்பு குறித்து, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.