இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டார் மூவிஸ் என்ற பெயரில் அவரே தயாரித்திருந்தார்.
2021 செப்டம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது.

தற்போது இந்தப் படத்தின் மொத்த உரிமையை கலைப்புலி எஸ். தாணு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் வெளியாக இருக்கும் அந்தகன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் #Andhagan திரைப்படத்தை உலகெங்கும் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம் @actorprashanth @actorthiagaraja @Music_Santhosh @SimranbaggaOffc @thondankani @iYogiBabu@PriyaAnand @ksravikumardir pic.twitter.com/9siN9MrtaF
— Kalaippuli S Thanu (@theVcreations) March 2, 2022
இந்த படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
[youtube-feed feed=1]