லக்னோ: பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கும், மதம், இனம் ரீதியிலான தாக்குதல்களாலும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், உறவினர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மேலும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹத்ராசில் இளம்பெண் ஒருவர் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தாக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹத்ராசை சேர்ந்த 6 வயது சிறுமி வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள 6வயது சிறுமி, உறவினர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.