
உத்தரகண்ட்டில் உள்ள காலணி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
உத்தரகண்ட் மாநிலத்தில் டோராடூன் மாவட்டத்தில் உள்ள செருப்புகள் விற்பைனை செய்யும் கடை ஒன்றில் திடீரென தீ பிடித்து.
டேராடூன் மாவட்டம் பல்டன் பஜாரில் உள்ள ஒரு காலணி கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீ யணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து 4 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
Patrikai.com official YouTube Channel