உத்தரகாண்ட்:
உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள ஆப்பிள் மரங்களை குரங்குகளிடம் பாதுகாக்க வேண்டும் அல்லது நடவடிக்கை பாயும் என அங்குள்ள காவலர்களுக்கு இன்ஸ்பெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த் உத்தரவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய்ளுளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த டி.ஐ.ஜி., இந்த உத்தரவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும். இதுகுறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.