டேராடூன்:
உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் சிங் ராவத் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் அருகில் உள்ள பாபோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த தகவலறிந்து, உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, சுகாதாரத்துறை அமைச்சரை போனி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
Patrikai.com official YouTube Channel