டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா ஆற்றில் பனிச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 168  பேரை காணவில்லை என்று வெள்ளப் பெருக்கு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி இன்று 7வது நாளாக தொடர்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமய மலையின் தபோவன் பகுதியில் கடந்த கடந்த 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  திடீரென ஏற்பட்ட பனிச்சரிவால் உருகிய பனிக்கட்டிகள் நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள ரிஷிகங்கா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் அதன் துணை ஆறு அலகண்டா  ஆற்றில் கலந்தது.  உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அங்கு அமைக்கப்பட்டிருந்து 13.2 மெகா திறன் கொண்ட நீர் மின்சக்தி நிலையம் அடித்துச் செல்லப்பட்டது.

தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 520 மெகா வாட் நீர் மின் நிலையத்தையும், வெள்ளம் சேதப்படுத்தியது. சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர் நிலையத்தில் ஏராளமானோர் பணியாற்றி வந்தனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,  இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை முதலில் போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த திடீர் விபத்தில்,  நேற்று முன்தினம் வரை  மணிவரையில் 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன  197 பேரை காணவில்லை என தெரிவிக்கப்ட்டிருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக மக்களைவியல் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்தார். அதில்,  பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  38 ஆக அதிகரித்து உள்ளதாகவும், அவர்களின் பலரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 168 பேரை காணவில்லை. அவரகளை தேடும் பணி தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  உத்தரகண்ட் மாநிலத்தின் ஜுவா குவாட் மற்றும் பாங் கிராமங்களில் குறைந்தது 184 கால்நடைகள் பேரழிவில் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.