லக்னோ: உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது ஆலை தீவிரமாக பரவி வருகிறது. உ.பி. மாநிலத்தில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 14ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்லைன் வாயிலாக அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது உ.பி. அரசின் துணைமுதல்வர் தினேஷ் சர்மா மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.