டேராடூன்

ற்போது உத்தராகாண்ட் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுள்ள புஷ்கர் சிங் தாமி மாநிலத்தின் மிக இளைய முதல்வர் ஆவார்.

கடந்த 4 ஆண்டாக உத்தராகாண்ட் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி வகித்து வந்தார்.  மார்ச் மாதம் இவர் பதவி விலகியதால் மக்களை உறுப்பினர் தீரத் சிங் ரவத் முதல்வர் பதவி ஏற்றார்.   பதவி ஏற்று 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக இவர் தேர்வாக வேண்டிய நிலையில் தேர்தல் நடப்பதில் சிக்கல் உண்டானது.

இதையொட்டி பாஜக தலைமையுடன் ஆலோசித்த தீரத் சிங் பதவி விலகினார்.  நேற்று முன்தினம் அம்மாநில ஆளுநரிடம் தீரத் சிங் ராஜிமானாம் கடிதம் அளித்தார்.  நேற்று மாலை பாஜக மத்திய பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் டேராடூனில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று அவருக்கு உத்தராகாண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..   இன்னும் 8 மாதங்களில் உத்தராகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  அதுவரை இவர் முதல்வராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.  தற்போது 45 வயதாகும் புஷ்கர் சிங் மாநிலத்தின் மிக இளைய முதல்வர் ஆவார்.