
டில்லி
ரிபப்ளிக் டிவியை சேர்ந்த அர்னாப் மேலும், அதன் செய்தியாளர்கள் மேலும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர்கள் கவுன்சிலில் உதயகுமார் புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் உதயகுமார் கூடன்குளம் அணுமின்நிலையைப் போராட்டத்தைப் பணத்துக்காகத்தான் நடத்தினார் என்பதை போன்று ஒரு செய்தியை ரிபப்ளிக் டிவி வெளியிட்டது. இது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதை உதயகுமார் மறுத்துள்ளார். இந்த செய்தியைப் பற்றி அவரு பத்திரிகையாளர்கள் கவுன்சிலுக்கு புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.
அந்த மனுவின் தமிழாக்கம்
அன்புள்ள ஐயா
வணக்கம்
ரிபப்ளிக் டிவியை சேர்ந்த திரு. அர்னாப் ரஞ்சன் கோஸ்வாமி மற்றும் அவருடன் பணியாற்றும் ஸ்வேதா, சஞ்ஜீவ் ஆகியோரால் நானும் என் குடும்பத்தினரும் கடும் துன்புறுத்தலுக்கு ஆளானதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி அன்று :ஸ்வேதா ஷர்மா (பின்பு அவருடைய உண்மைப் பெயர் ஸ்வேதா கோத்தாரி என தெரிந்துக் கொண்டேன்) என்பவர் நாகர்கோவிலில் உள்ள என் வீட்டுக்கு வந்தார். அவர் தான் இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் என்றும் அவருடைய ஆராய்ச்சிக்கு என் உதவியையும் கேட்டார். அவருடன் அவருடைய உள்ளூர் நண்பரான சஞ்ஜீவ் என்பவரும் வந்திருந்தார். நான் அவருக்கு சில புத்தகங்களை கொடுத்து, அவருடைய கேள்விகளுக்கு பதில் அளித்தேன்
2017, ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தான் தங்கியிருந்த விடுதிக்கு வர சொல்லி ஸ்வேதா மேலும் சில கேள்விகளைக் கேட்டார். அப்போது அவருடைய பிரிட்டனை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்துக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார். நான் அவரிடம் எங்கள் இயக்கம் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதில்லை எனவும் வங்கி கணக்குகளும் எங்களிடம் இல்லை எனவும் தெரிவித்தேன், பிறகு அவர் வேறு ஏதும் வழிகளில் பணம் அனுப்பலாமா எனக் கேட்டார். நான் அவரிடம் என்னுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதையும் எனது கட்சியில் வெளிநாட்டில் இருந்து யாரிடம் பணம் வாங்குவதில்லை என்பதையும் கூறினேன். அவர் எனக்கு உதவி அளிக்க விரும்பினால் அந்தப் பணத்தை இந்தியாவில் வசிக்கும் அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்து அவர்கள் மூலமாக எனக்குத் தரலாம் எனக் கூறினேன். நாங்கள் அனைத்துக்குக் கணக்கு காட்ட வேண்டி இருப்பதால், ரசீதுகள் தரப்படும் எனவும் கூறினேன். எனக்கு வெளிநாட்டு உதவி பெறுவதில் விருப்பம் இல்லை என்பதையும் தெரிவித்தேன்.
திரு. அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவருடைய குழுவினர் ஜூன் 20ஆம் தேதியன்று பகல் 2 மணிக்கு ரிபப்ளிக் டிவியில் இதனை “ஸ்டிங் ஆபரேஷன்” என்னும் தலைப்பில் ஒளிபரப்பினார்கள். அதில் எங்களது கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு சர்ச்சுகளும், வெளிநாட்டினரும் பணம் வழங்குவதாக கூறப்பட்டது. நான் அந்த நிகழ்வில் நடைபெற்றது என்ன என்பதையும் அது எவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் விளக்கினேன். அர்னாப் நான் பேசுவதை சிறிதும் கவனிக்காமல் பெரிதாக கத்தி கூச்சல் போட்டு தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் ஒரு போராட்டத்தில் கலந்துக் கொள்ள கும்பகோணம் வந்திருந்த போது இந்த நிகழ்வு நடந்தது. அதே வேளையில் மாலை 2 மணி முதல் இரவு 11 மணி வரை சஞ்ஜீவ் என்னும் ரிபப்ளிக் டிவி ஊழியர் எனது இல்லத்துக்கு வந்து, வயதான என் பெற்றொர்கள் என் மனைவி, பள்ளி மாணவனான் என் மகன் ஆகியோரை இது பற்றி கருத்துத் தெரிவிக்கச் சொல்லி துன்புறுத்தியுள்ளார். நான் ஊரில் இல்லை என என் குடும்பத்தினர் தெரிவித்தும் விடாமல் துன்புறுத்தி உள்ளனர்.
சஞ்ஜீவ் திரும்ப ஜுன் 21ஆம் தேதியன்று காலையில் என் வீட்டுக்கு வந்து மீண்டும் என் குடும்பத்தினரை மிகவும் துன்புறுத்தியுள்ளார். என் வயதான தந்தை இவருடைய இந்த இரக்கமற்றா செயலை கண்டித்ததால் நான் சஞ்ஜீவை திட்டியதாக அவருடைய டிவியில் தெரிவித்தார். இவை அனைத்தும் நான் மாலையில் என் வீட்டுக்கு திரும்பியபின் தெரிந்துக் கொண்டேன்,
தனது TRP ரேட்டை உயர்த்திக் கொள்வதற்காக ரிபப்ளிக் டிவி என்னைப் பற்றிய அவதூறு செய்திகளை ஒளிபரப்புகிறது. இது போன்ற செய்கை ஜனநாயகத்துக்கு எதிரானது. ரிபப்ளிக் டிவியும், அதன் செய்தியாளர்களும் தங்களின் எல்லையை மீறி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கடும் மன உளைச்சலை தந்துள்ளனர்.
தாங்கள் இதுபோல யாருக்கும் இனி நேரிடாமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தங்களது உடனடியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். மீண்டும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
[youtube-feed feed=1]