ப. சிதம்பரத்தின் சந்தேகம்

Must read

டில்லி

கூட்டுறவு வங்கிகளில் உள்ள பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் மாற்றலாம் என்னும் அறிவிப்புக்கும், சிவசேனா குடியரசுத்தலைவர் வேட்பாளரை ஆதரிப்பதற்கும் சம்மந்தம் இருக்கலாம் என ப சிதம்பரம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் இதுவரை மாற்றாமல் வைத்துள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை இன்னும் ஒரு மாதத்தில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் இது பற்றி கூறுகையில் நள்ளிரவில் இந்த அறிவிப்பு வந்ததாகவும், அதற்கு அடுத்த நாட்களில் சிவசேனா தனது ஆதரவை பா ஜ க வின் குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு தரப்போவதாக அறிவித்ததும் தற்செயலா, இல்லை ஒன்றுக்கொன்று சம்மந்தம் உள்ளதா என தனது ட்விட்டர் பக்கத்தில் வினவியுள்ளார்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article