சர்வதேச அளவில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் உஸ்மான் க்வாஜா!

Must read

ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்துள்ளார். உஸ்மான் க்வாஜாவின் அசத்தல் சதத்தினால் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

usman

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. ஏற்கெனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது ஒரு நாள் போட்டி ரஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கெனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றதால், இந்த போட்டியில் கட்டாயம் ஆஸ்தி்ரேலிய அணி வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

முதலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இருவரும் போட்டியின் தீவிரத்தை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் 20 ஓவர்கள் முடிவில் கவாஜா மற்றும் ஆரோன் அரைசதம் எடுக்க ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் பின்ச் 31.5வது ஓவரில் 99 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் நிலைத்து விளையாடிய கவாஜா 37வது ஓவரில் 100(11 பவுண்ட்ரி மற்றும் 1 சிக்ஸர்) ரன்கள் கடந்து சதம் அடித்தார். 38வது ஓவரில் ஷமியின் பந்து வீச்சை எதிர்க் கொண்ட கவாஜா 104(113 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை க்வாஜா பதிவு செய்துள்ளார்.

More articles

Latest article