சென்னை

மிழர்கள் நாகரிகம்  அற்றவர்கள் இல்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

இன்று சென்னையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில் தமிழஜ புதுமைத் தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது உதயநிதி செய்தியாளர்களிடம்,

”நாங்கள் என்ன நாகரிகம் அற்றவர்களா?. எங்களைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா?. இப்படி சொல்பவர்கள்தான் நாகரிகமில்லாமல் தமிழர்களை விமர்சிக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழ்நாட்டையும், பெரியாரையும் இழிவுபடுத்துவது மத்திய அரசின் ஒரு பேர்ட்டன். இதையே ஒரு கொள்கை முடிவாக வைத்துள்ளனர்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். மும்மொழி கொள்கை விவகாரத்தை திசை திருப்பவே மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.

என்று கூறியுள்ளார்,