சென்னை:

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அனுமதியின்றி விளை நிலங்களில் தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதுத் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபமாக உருவெடுத்துள்ள நிலையில், சென்னையில் மக்கள் குடிநீருக்காக அல்லாடும் சோகம் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக  தமிழகத்தில் போதிய மழை பெய்யதாததாலும், காவிரி, கிருஷ்ணா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து நீர் தறக்கப்படாததாலும் கடும்மையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க, தேவையான நடவடிக்கையை எடுத்து வெற்றிகரமாக கையாண்டு வருவதாக  கூறினார்.

மேலும், சென்னையில் 9 ஆயிரம் லாரிகள் முலம் குடிநீர் விநியோகம்  நடைபெற்று வருவதாகவும், நாள்தோறும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக  தெரிவித்தவர்,  நெமிலியில் கடல்நீரை குடிநீராக மாற்றி நாள் ஒன்றுக்கு   150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தண்ணீர் பஞ்சத்தை உணர்ந்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் அவர்  வேண்டுகோள் விடுத்தார். விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அது மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் .

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.