ஒரு நாளைக்கு  900,000 மரக்கன்றுகளை நட முடியுமா ?

முடியும். நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்…
 காலநிலை மாற்றம் மீதான போரை இயற்கை வெல்ல முடியும்.  ஒருவேளை மனித இனம் ஒரு  சிறிய உதவியை9 செய்யுமெனில் இது சாத்தியம்.  
பழைய இராணுவ விமானங்கள் இப்போது மாற்றி அமைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகின்றன.  இந்த விமானங்களை பயன்படுத்தி கண்ணி வெடிகளுக்கு பதிலாக  மர விதைக் குண்டுகளை நிலத்தின் மீது தூவ முடியும்.
 
 

 
பழைய இராணுவ விமானங்கள் இப்போது  ஒரு புதிய இயக்கவியலுடன் மீண்டும் திருத்தி வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களைப் பயன்படுத்தி, நாம் கண்ணி வெடிகளுக்குப் பதிலாக, மரம் குண்டுகளை வீசலாம்.
பெரும்பாலான பெரிய சுற்றுச்சூழல்களில் அதிகமாக மரங்கள் வெட்டப்பட்டு, நாம்  இழக்கும் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கும், இந்த உலகம் பொன்னான ஆக்சிஜன் தயாரிப்பாளர்கள் மற்றும் தாவர மருந்துகளை இழந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் மரத்தின் மதிப்பை உணர்ந்துள்ளோம், ஆனால் நம் கலாச்சாரத்தின் அதீத பயன்பாட்டினால்,  ஒவ்வொரு வெட்டப்படும் மரத்திற்கு ஈடாக ஒரு மரம் நடும் நடைமுறையை நம்மால் தொடர்ந்து செய்ய முடியவில்லை.

பழைய இராணுவ விமானங்களைப் பயன்படுத்தி, ஒரு ஆண்டுக்கு நாம் ஒரு கோடி மரங்களை நட முடியும். இந்த விமானங்கள், வணிகத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டு சீரழிந்து போயுள்ள காட்டுப் பகுதிகளில் மீண்டும் செழிப்பை ஏற்படுத்த மர குண்டுகளை வீசும். காடுகளை வான்வழி மீட்கும் விமானங்கள், பாலைவனங்கள் உட்பட எல்லா தொலைதூர பகுதிகளையும் அடைய முடியும். இது தனிநபர்களின்  கைகள் மூலம் விதைகள் நடும் தேவையை நீக்குகிறது. இத்திட்டத்தில், ஆண்டுக்கு 10 அடிக்கு மேல் வளரும், உலகிலேயே மிக வேகமாக வளரும் சில மரங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த மரங்கள், காடுகளை அழிக்கும் எதிர்மறை விளைவுகளை  ஒரு சில ஆண்டுகளுக்குள் முழுமையாக எதிர்க்கும்.