வாஷிங்டன்,
மெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறி உள்ளார் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப்.
அவரது அறிவிப்பு அங்கு தங்கி உள்ள வெளிநாட்டினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
donald
தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று பேட்டியளித்த, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டிரம்ப் கேள்வி ஒன்று பதில் அளித்தபோது இவ்வாறு கூறினார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள 30 லட்சம் பேர் வெளியேற்றப்படு வார்கள் அல்லது கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறினார்.
அவரது அறிவிப்பு, அந்நாட்டில் தஞ்சமடைந்துள்ள அகதிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளி நாட்டினிரும் பதற்றமடைந்துள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில், அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் உள்ள சுவர்களின் உயரம் அதிகரிக்கப்படும் என்றும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.